தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து துறையில் ஒரு புதிய மாற்றத்திற்கான பயணம் தொடங்கியுள்ளது.தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (SETC), தங்களது முதல் வோல்வோ பிரீமியம் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயணிகளுக்கு மிகுந்த வசதியும் பாதுகாப்பும் வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த நிகழ்வு, தமிழ்நாடு அரசின் நவீனத்தன்மை, பயணிகளின் நலன், மற்றும் ச்மார்ட் மோபிலிட்டி நோக்கில் மேற்கொள்ளும் உறுதியான முயற்சியை பிரதிபலிக்கிறது. — புதிய தலைமுறைக்கான கூட்டணி [...]