அரசு போக்குவரத்து கழகத்தில் 1 டூ 1 பஸ்களில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு

MTC, SETC, TNSTC




சேலம்: அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 1 டூ 1 பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 8 கோட்டங்களில், சுமார் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், டவுன் பஸ், சாதாரண கட்டண பஸ், எக்ஸ்பிரஸ், 1 டூ 5, 1 டூ 3, 1 டூ 1 மற்றும் விரைவு போக்குவரத்து கழகத்தில் அல்ட்ரா டீலக்ஸ், சிலீப்பர் கோச், ஏசி பஸ்கள் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகை பஸ்களுக்கும் கட்டணம் வேறுபட்டு இருக்கும். குறைந்த கட்டணத்தில் செல்வதற்காக சாதாரண பஸ்களில், அதிகளவு பயணிகள் செல்கின்றனர். இருப்பினும் அவசரமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல எக்ஸ்பிரஸ் மற்றும் 1 டூ 1 பஸ்களை பயணிகள் தேர்ந்தெடுக்கின்றனர்.

சாதாரண பஸ்கள் செல்லும் நேரத்தை விட 1 மணி நேரத்திற்கு முன்பாக, இந்த பஸ்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறது. இதனால், எக்ஸ்பிரஸ் மற்றும் 1 டூ 1 பஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், இதை பயன்படுத்தி, கட்டணத்தை தாறுமாறாக போக்குவரத்து கழகம் உயர்த்தி வருவது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில், 1 டூ 1 பஸ்கள் அனைத்திலும், ‘3 பை 2’ என்ற அடிப்படையில் சீட்கள் இருக்கும். அதனை தற்போது ‘2 பை 2’ என்ற அடிப்படையில் சீட்களை மாற்றி அமைத்துள்ளனர். இதற்காக டிக்கெட் கட்டணத்தை ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளனர்.

சென்னை, கோவை, சேலம், கும்பகோணம், விழுப்புரம் என 8 போக்குவரத்து கழகத்திற்கும் இத்தகைய 2 பை 2 சீட்கள் அடிப்படையிலான பஸ்களை கொடுத்து 1 டூ 1 என பெயரிட்டு அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர். இது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கோட்டத்தில், சேலம்-கோவை, ஓசூர்-கோவை ஆகிய 2 வழித்தடத்தில் தலா ஒரு பஸ் என 2 பஸ்களை இயக்கி வருகின்றனர். இந்த பஸ்களில் ‘2 பை 2’ என்ற அடிப்படையில் சீட்கள் உள்ளன. இதில், சேலம்-கோவைக்கு வழக்கமான 1 டூ 1 பஸ்களில் ரூ.155 டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் இந்த புதிய 1 டூ 1 பஸ்களில் ரூ.23 அதிகரிக்கப்பட்டு, ரூ.178 கட்டணமாக வசூலிக்கின்றனர். இதேபோல், கோவை-ஓசூர் பஸ்சிலும் வழக்கமான 1 டூ 1 பஸ் கட்டணத்தை விட ரூ.20 அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து, கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சேலம் கோட்டத்தில் 2 புதிய 1 டூ 1 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், 2 பை 2 என்ற அடிப்படையில் 41 சீட்கள் மட்டுமே இருக்கும். செமி சிலீப்பர் வசதி கொண்டிருப்பதால், பயணிகள் சாய்ந்து படுத்துக் கொள்ளலாம். விசாலமாக இருக்கும் இந்த பஸ்சின் கட்டணம், வழக்கமான 1 டூ 1 பஸ் கட்டணத்தை விட ரூ.20 முதல் 30 வரை அதிகமாக இருக்கும். காரணம், வழக்கமான 1 டூ 1 பஸ்களில் (3 பை 2 சீட்) 52 சீட்கள் அமைந்திருக்கும். அதில், வசூலாகும் கட்டணத்தை கணக்கிட்டே இதற்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்….

Source : Dhinakaran Online Newspaper




About the author: A Public Transport Enthusiast ! Writing About Namma TNSTC and SETC in this blog !! I am trying to connect with Travel Enthusiast using Public Transport as there regular choice of travel !!

0 comments… add one

Leave a Comment

%d bloggers like this: